அரசியல் செய்தி

தமிழ்நாடு

கால் பிடித்து காலம் கடத்தியவர்: ரஜினியுடன் மீண்டும் உதயநிதி மோதல்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (47)
Advertisement
கால் பிடித்து காலம் கடத்தியவர்:  ரஜினியுடன் மீண்டும் உதயநிதி மோதல்

சென்னை; 'கால் நூற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்திய காரியக்காரர்' என நடிகர் ரஜினியை தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார். இது ரஜினி ரசிகர்களை கொதிப்பில் தள்ளியுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்று பேசினார். அப்போது 'முரசொலி பத்திரிகையை ஒருவர் வைத்திருந்தால் அவரை தி.மு.க.,காரர் என்பர். ஆனால் துக்ளக் இதழை வைத்திருப்பவரை அறிவாளி என்பர். காலம் கெட்டு போச்சு அரசியல் கெட்டு போச்சு சமுதாயமும் ரொம்ப கெட்டுப் போச்சு' எனக் கூறியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சை விமர்சித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகனும் கட்சியின் இளைஞரணி செயலருமான உதயநிதி டுவிட்டரில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதில் உள்ள கருத்துகள் ரஜினியின் சினிமா மற்றும் அரசியல் வாழ்வை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உதயநிதியின் 'டுவிட்டர்' பதிவு'முதல்வர்னா முத்தமிழ் அறிஞர், தலைவர்னா புரட்சித்தலைவர், தைரியலெட்சுமின்னா அம்மா' என்று -கால் நுாற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்தி 'தலை சுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில் முரசொலியை கையிலேந்தி பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க.காரன். நான் தி.மு.க. காரன்; பொங்கல் வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தி.மு.க. நடத்திய குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணியின் போது 'வயதானவர்களை வீட்டிலேயே விட்டு வருமாறு ரஜினியை மறைமுகமாக உதயநிதி விமர்சனம் செய்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினியுடன் மோதலை ஆரம்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Chennai,இந்தியா
17-ஜன-202014:28:23 IST Report Abuse
KavikumarRam சின்ன சுடலை எப்படியாவது சீக்கிரமா பேமஸ் ஆகலாம்னு ட்ரை பண்ணுறாராமாம். கண்டுக்காம விடுங்க பாஸ்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202012:19:35 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் மருத்துவர்- முரசொலிக்கு மூல பாத்திரம் எங்கே? தலைவர் - முரசொலி படிக்கிறவனுக்கு மூளை இருக்கா? சொடலை மவன் - ரெண்டும் இருந்த காண்பிக்கமாட்டமா படுத்துறீங்களே?
Rate this:
Share this comment
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202011:13:58 IST Report Abuse
Indian Dubai The real quality of DMK family. They never have any qualifications, knowledge and purely living by sucking the blood of TN people idiots & fools who following their party. KATTUMARAM, SUDALAI cheated each & every one to reach this position. They only looted by joining hands with EVR, CONG & alliance and killed who ever opposes. They don't have any rights, knowledge and capacity to speak about Rajni. They are shameless creatures
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X