பொது செய்தி

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் விஷமம் பயங்கரவாதிகள் சதி அம்பலம்

Added : ஜன 15, 2020
Advertisement

ஜம்மு: ஜம்மு - காஷ்மீருக்குள் மீண்டும் ஊடுருவி பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர ரகசிய தகவல் தொடர்பு மற்றும் 'இன்டர்நெட்' தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. அங்கு சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதற்காக தொலைபேசி 'மொபைல்' மற்றும் 'இன்டர்நெட்' சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது படிப்படியாக தடைகள் விலக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் 'ப்ரீபெய்ட் மொபைல்' மற்றும் 'இன்டர்நெட்' சேவைகள் மட்டும் முழுமையாக செயல்படவில்லை.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் அரசு செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீருக்குள் மீண்டும் ஊருருவி பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 'என்கிரிப்டட் மொபைல் கம்யூனிகேஷன்' எனப்படும் ரகசிய தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தகவல் பரிமாறி கொள்பவர்கள் மற்றும் அந்த தகவல்களை கண்காணிப்பது கடினம். மேலும் இன்டர்நெட் தொலைபேசியையும் பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X