பொது செய்தி

தமிழ்நாடு

பெரியநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா

Added : ஜன 15, 2020
Advertisement

மங்கலம்பேட்டை : கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பத்தில், வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி, 23ம் தேதி தேர் திருவிழா நடப்பது வழக்கம். இங்கு நடைபெறும் 10 நாள் விழாவிற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா நேற்று முன்தினம் (14ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.

பங்கு தந்தை தேவசகாயராஜ் தலைமையில், மாலை 6:30 மணியளவில் சிறப்பு கூட்டுத் திருப்பலி, இரவு 7:00 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. பாளையக்காரர் பாலதண்டாயுதம் உட்பட10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை செய்தனர்.தினசரி காலை 9:00 மணிக்கு திருப்பலி, மாலை 6:00 மணிக்கு கூட்டுத் திருப்பலி நிகழ்ச்சியும், தேர்த் திருவிழாவையொட்டி, வரும் 23ம் தேதி காலை 9:00 மணிக்கு திருப்பலி, மாலை 6:00 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த தேரில் பெரியநாயகி அன்னை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவாக 24ம் தேதி மாலை 6:00 மணியளவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X