பொது செய்தி

தமிழ்நாடு

திருவையாறு தியாகராஜருக்கு 173வது இசை அஞ்சலி

Added : ஜன 15, 2020
Advertisement
திருவையாறு தியாகராஜருக்கு 173வது இசை அஞ்சலி

தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 173வது ஆராதனை விழாவை முன்னிட்டு நேற்று நடந்த பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. 173வது ஆண்டு ஆராதனை விழா 11ம் தேதி துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி நினைவு மண்டபத்துக்கு இசை கலைஞர்கள் ஊர்வலமாக வந்தனர்.

அங்கு தியாகராஜர் சிலைக்கு பால் சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தன. பிறகு 9:00 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. 1000த்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒருமித்து பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன் மஹதி மகாநதி ஷோபனா ஜனனி ஓ.எஸ். அருண் சந்தீப் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லகில் தியாகராஜர் சுவாமி வீதி உலா வந்தார். 11:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்ஸவத்துடன் விழா நிறைவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X