பொது செய்தி

தமிழ்நாடு

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

Added : ஜன 15, 2020
Advertisement

கடலுார் : புதுடில்லி தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துறை மற்றும் கடலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் கடலுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கடலுார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் பேராசிரியர் சாந்தி, போதை பொருட்களின் தன்மை, அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விளக்கி பேசினார். குடிப்பழக்கத்தில் அடிமையானவர்களை திருத்தும் மைய ஆற்றுபடுத்துனர் இந்துமதி. பேராசிரியர் கார்த்திகேயன், கூட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் போதை பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் உள்ள சட்டங்கள குறித்து விளக்கினர். நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் மாலா, தினகரன், மகேஷ், புவனேஷ்வரி, சதீஷ், சசிகலா, தேவி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X