பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு திறனை வளர்த்து கொள்ளுங்கள் இளைஞர்களுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., 'அட்வைஸ்'

Added : ஜன 15, 2020
Advertisement

கிள்ளை : கிராம இளைஞர்கள் விளையாட்டு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.கிள்ளை அடுத்த பள்ளிப்படை ஊராட்சியில் அம்மா ஊரக இளைஞர்கள் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடந்தது.

சேர்மன் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், பி.டி.ஓ., சிவஞானசுந்தரம், ஊராட்சி தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., அசோக் பாபு வரவேற்றார்.புதிதாக அமைக்கப்பட்ட அம்மா ஊரக இளைஞர்கள் விளையாட்டு மைதானத்தை, திறந்து வைத்து, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பாண்டியன் எம்.எல்.ஏ., பேசியதாவது:கிராம இளைஞர்கள் விளையாட்டு திறனை வளர்த்துக்கொள்வதற்காக, முதல்வர் பழனிசாமி பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

இந்த பகுதிக்கு தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, பள்ளிப்படை ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக மாற்றுவேன் என்றார்.விழாவில், உதவி செயற்பொறியாளர் ஜெரால்ட், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா பாலசுப்ரமணியன், கிள்ளை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்னாள் துணைத் தலைவர் தமிழரசன், நிர்வாகிகள் சேட்டு என்கிற பாலசுப்ரமணியன், மாரியப்பன், சூரியகுமாரி, சேகர், பாலு, கோவிந்தராஜ் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் சங்கீதா துரை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X