ரதுல் பூரி ஜாமினை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி: மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரிக்கு ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' நிறுவனத்திடம் இருந்து நம் விமானப் படைக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

இதில் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அந்த ஒப்பந்தம் 2014ல் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய பிரதேச முதல்வரும் காங். மூத்த தலைவருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியை கடந்த ஆண்டு செப்டம்பரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ரதுல் பூரிக்கு ஜாமின் வழங்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சுரேஷ் கெய்ட் கூறியதாவது: இந்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரதுல் பூரி 100 நாட்களுக்கும் மேலாக அமலாக்கத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதற்கு எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X