சீன கரன்சி நிலைப்பாடு அமெரிக்கா மாற்றியது

Added : ஜன 15, 2020
Advertisement

வாஷிங்டன்: சீனாவின் கரன்சி தொடர்பான நிலைப்பாட்டை, அமெரிக்கா மாற்றியுள்ளது.கடந்த ஆண்டு, மே மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனா, அதன் யுவான் கரன்சி மதிப்பை செயற்கையாக குறைப்பதாக, குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, கரன்சி மதிப்பில், செயற்கையாக ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியலில், சீனா சேர்க்கப்பட்டது.அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையடுத்து, வரி குறைப்பு தொடர்பாக, அமெரிக்கா - சீனா இடையே பலமுறை பேச்சு நடை
பெற்று வந்தது. இதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, இன்று, அமெரிக்கா - சீனா இடையே, வர்த்தகம், வரி ஆகியவை தொடர்பான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, செயற்கையாக கரன்சி மதிப்பை உயர்த்தும் நாடுகளின் பட்டியலில் இருந்து, சீனாவை நீக்கியுள்ளது. இது, இரு நாடுகளின் பரஸ்பர வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் யுவான் கரன்சி மதிப்பு, 6.90 ஆக இருந்தது. அமெரிக்கா, செயற்கையாக கரன்சி மதிப்பில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தும் நாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த பட்டியலில், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X