பொது செய்தி

இந்தியா

இந்தியா வருகிறார் டொனால்டு டிரம்ப்

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார். கடந்தாண்டு, செப்.,ல் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, '2020 ஜன., 26ல் நடக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும்' என, அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், பயண திட்டம் உருவாக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த மாதம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சென்றிருந்தனர். அப்போது, டிரம்ப் பயணம் குறித்து பேசினர்.அதைத் தொடர்ந்து, டிரம்ப்பின் பயண திட்டம் குறித்து, இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் இந்தப் பயணம் இருக்கலாம் என, தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X