குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற நெருக்கடி தர வேண்டும்: அமெரிக்க எம்.பி.,

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement

வாஷிங்டன்: 'குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு, இந்தியாவிற்கு, அமெரிக்கா நெருக்கடி தர வேண்டும்' என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு, அந்நாட்டின் ஜனநாயக கட்சி எம்.பி., பாப் மெனென்டஸ் கடிதம் எழுதியுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நான், கடந்த ஆண்டு, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, சமூக ஆர்வலர்கள் பலரை சந்தித்தேன். அவர்கள், மத்திய அரசின் கொள்கைகளால், இந்தியாவின் எதிர்கால ஜனநாயகம் பாதிப்பிற்கு உள்ளாகும் என, அச்சம் தெரிவித்தனர்.

அசாமில், தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கம் காரணமாக, வங்கமொழி பேசும், 19 லட்சம் பேர், குறிப்பாக முஸ்லிம்கள் நாடற்றவர்களாக மாறுவர். தற்போது, இத்திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது, இந்தியாவின் நீண்ட, நெடிய மதச்சார்பற்ற நிலைப்பாட்டிற்கும், ஜனநாயக மாண்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.குடியுரிமை திருத்த சட்டம், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கனிலிருந்து இந்தியா வந்துள்ள சிறுபான்மை மக்களை பாதுகாக்கிறது.

அதேநேரத்தில், அண்டை நாடுகளான, பாகிஸ்தான், பர்மாவில் சித்ரவதைக்கு உள்ளாகும், அஹமதியா, ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை அனுமதிக்க மறுக்கிறது. இது, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையாக தெரிகிறது. ஆகவே, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு, இந்தியாவை, அமெரிக்கா நிர்பந்திக்க வேண்டும்இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அசாமில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படிதான், தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்தும் எண்ணமில்லை என, சமீபத்தில் பிரதமர், மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
16-ஜன-202008:17:04 IST Report Abuse
பெரிய ராசு அப்ப நீ மெக்ஸிகோ எல்லையில் எதுக்கு செவுரு கட்டுறீங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X