சமத்துவப் பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவப் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டு தலைமை தாங்கினார். மேலாளர் அசோக்குமார், துப்புரவு அலுவலர் குமார், கட்டட ஆய்வாளர் சேகர், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் ஷியாம், மேற்பார்வையாளர்கள் முத்தமிழன், முத்தமிழ்ச்செல்வன், கொளஞ்சி உட்பட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.அதில், நகராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வணங்கினர். தொடர்ந்து, நாளை காணும் பொங்கலை முன்னிட்டு, மணிமுக்தாற்றில் பொது மக்கள் கூடுவதற்கு வசதியாக சுத்தம் செய்யும் பணி துவங்கியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X