பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரிய விளையாட்டு விழா போஸ்டர்கள்

Added : ஜன 15, 2020
Share
Advertisement

கடலுார் : நம்ம கடலுார் அமைப்பு சார்பில், நடைபெற உள்ள பாரம்பரிய விளையாட்டு விழா குறித்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

இது குறித்து நம்ம கடலுார் தலைவர் சந்திரசேகர், செயலாளர் பட்டேல், ஓம்பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், அறங்காவலர் கவுஸ் வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது;நம்ம கடலுார் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாரம்பரிய விளையாட்டு விழாவை நடத்தி வருகிறோம். 5ம் ஆண்டு பாரம்பரிய விளையாட்டு விழா, நாளை 17 ம் தேதி, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்குகிறார்.

நம்ம கடலுார் அமைப்பு தலைவர் சந்திரசேகர் வரவேற்கிறார்.விழாவை, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் துவக்கி வைக்கிறார். அமைச்சர் சம்பத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, பேசுகிறார். பாரம்பரிய விளையாட்டு திருவிழாவில் மாட்டு வண்டி ஊர்வலம், கோலப்போட்டி, சைக்கிள் பந்தயம், இளவட்டக்கல், கோலிக்குண்டு, பம்பரம், பட்டம் விடுதல், கில்லி, பரமபதம், பல்லாங்குழி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது.இந்தாண்டு புதிதாக வழுக்கு மரம், பெண்களுக்கான பாரம்பரிய உணவு சமைத்தல் போட்டி, குழந்தைகளுக்கு பாரம்பரிய உடைகள் போட்டி நடைபெற உள்ளது.

சமையல் மற்றும் பாரம்பரிய உடைகள் போட்டிக்கு தொலைபேசி மூலம் முன் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். டாக்டர் கண்ணன், முரளி மற்றும் தன்னார்வலர்கள் ஜோஸ் மகேஷ், இளங்கோ, ஜெபர்சன், ராம்குமார், சுப்ரமணியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X