சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., கொலை பயங்கரவாதிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

சென்னை: எஸ்.ஐ. கொலை வழக்கில் கர்நாடகாவில் கைதானவர்கள் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வாகன சோதனைச் சாவடியில் ஜன. 8ல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இரண்டு வாலிபர்கள் தலையில் தொப்பி அணிந்தவாறு தப்பி ஓடிய வீடியோ காட்சிகள் போலீசுக்கு கிடைத்தது.

அதை ஆய்வு செய்ததில் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் 32, கோட்டார் இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக் 28 என்பது தெரிந்தது. இரண்டு வாலிபர்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.தப்பி ஓடிய வாலிபர்களை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இரண்டு வாலிபர்களையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைதான வாலிபர்கள் நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மத பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு உள்ளதா அல்லது ரியல் எஸ்டேட் மற்றும் கட்ட பஞ்சாயத்து கும்பல் பின்னணியா என விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X