சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில்வர் பீச்சில் முதியவர் உடல்

Added : ஜன 15, 2020
Advertisement

கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் கரை ஒதுங்கிய முதியவர் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் சில்வர் பீச்சில் நேற்று மாலை 5:00 மணியவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கரை ஒதுங்கியது.தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார், முதியவர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து இறந்தவர், அருகில் உள்ள உப்பனாற்றில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு எங்கேனும் கடலில் குளித்தபோது, தண்ணீரில் மூழ்கி இறந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X