சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில் கடத்திய மூவர் கைது

Added : ஜன 15, 2020
Advertisement

மரக்காணம் : புதுச்சேரியில் இருந்து மரக்காணம் வழியாக சென்னைக்கு வேன் மற்றும் பைக்கில் மது பாட்டில் கடத்தியவர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மலிவு விலையில் மதுபானங்களை வாங்கி தமிழக பகுதிக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி., இளங்கோவன் மேற்பார்வையில் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா, சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த டூரிஸ்டு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 84 மது பாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து வேனை ஓட்டி வந்த சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த மரியரத்தினம் மகன் வினோத்குமார், 29; என்பவரை கைது செய்தனர்.

இதேபோன்று, பைக்கில் 36 மது பாட்டில்களை கடத்தி வந்த கோட்டக் குப்பத்தைச் சேர்ந்த மக்கான் மகன் சல்மான், 27; பைக்கில் 30 மது பாட்டில்களை கடத்தி வந்த சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் சேமராஜ், 29; ஆகியோரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர் மேலும், கடத்தப்பட்ட மதுபாட்டில், கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X