பொது செய்தி

தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றில் முட்புதர்கள் அகற்றும் பணி

Added : ஜன 15, 2020
Advertisement

விழுப்புரம் : 'தினமலர்' செய்தி எதிரொலியால், விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் முட்புதர்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் செல்லும் தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரும் 19ம் தேதி ஆற்றுத்திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில், பல்வேறு கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து சுவாமிகள் ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.இதை காண்பதற்கு, ஆயிரக்கணக்கான மக்கள் தென்பெண்ணை ஆற்றில் குவிவது வழக்கம். இந்நிலையில், பேரங்கியூர், பிடாகம், குச்சிப்பாளையம் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றில் தற்போது முட்புதர்கள் மண்டி காடு போன்று காணப்பட்டது.

இதனால், ஆற்றுத்திருவிழாவில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளதாக 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பிடாகம், குச்சிப்பாளையம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் உள்ள முட்புதர்களை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X