எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.210 கோடியில் மேம்பாலம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (2)
Advertisement
கோரிப்பாளையம், மேம்பாலம், நெடுஞ்சாலை,ஒப்புதல்

மதுரை: மதுரையில் முக்கிய சந்திப்பான கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.210 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது. இதற்காக நில ஆர்ஜித பணிகள் துவங்கவுள்ளன.

இச்சந்திப்பில் அழகர்கோவில், பனகல், செல்லுார் பாலம் ஸ்டேஷன், ஏ.வி.பாலம், ஆழ்வார் புரம் ரோடுகள் சந்திக்கின்றன. இச்சந்திப்பை சுற்றி முக்கிய வர்த்தக நிறுவனங்கள், அரசு மருத்துவமனை, கல்லுாரி, பள்ளிவாசல் உள்ளிட்டவை உள்ளன.





தினமும் சராசரியாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சந்திப்பை கடந்து செல்கின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம். போராட்டங்களில் ஈடுபடுவோர் மக்கள் கவனத்தை ஈர்க்க இச்சந்திப்பை தேர்வு செய்கின்றனர். போராட்டங்களால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் உண்டு. அழகர்கோவில், மாட்டுத்தாவணி உள்ளிட்ட நகரின் வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இச்சந்திப்பை எளிதில் கடந்து நெல்பேட்டைக்கு செல்ல வசதியாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் நெரிசலை தவிர்க்க காளவாசல், கோரிப் பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்காக நிலங்களை ஆர்ஜிதம் செய்வதில் சில பிரச்னைகள் எழுந்தன. இருப்பினும் அப்பிரச்னைகள் சரி செய்யப்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலை துவங்கியுள்ளது.

இதுகுறித்து கடந்த வாரம் கலெக்டர் வினய் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. வருவாய், நெடுஞ்சாலை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்றனர். சந்திப்பிலுள்ள தேவர் சிலையை மறைக்காதளவிற்கு உயர்த்தி அமைக்க தேவர் சமுதாய அமைப்பினர் கேட்டு கொண்டனர். அதற்கு நெடுஞ்சாலைத்துறையினரும் ஒப்பு கொண்டனர். மேலும் பீடத்தை உயர்த்தி பாலத்தால் சிலை மறைக்காதளவிற்கு மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதால் விரைவில் நில ஆர்ஜித பணிகள் துவங்கவுள்ளன.

அழகர்கோவில் ரோட்டில் இருந்து துவங்கும் பாலம் தேவர் சிலைக்கு முன் இரண்டாக பிரிந்து அதன் ஒரு பகுதி ஏ.வி.பாலத்தையும், மற்றொரு பகுதி செல்லுார் செல்லும் அரசு மீனாட்சி மகளிர் கல்லுாரி ரோட்டை இணைப்பதாகவும் அமையும். ஏ.வி.பாலத்தை இணைக்கும் பாலம் 12, செல்லுாரை இணைக்கும் பாலம் 8.50 மீட்டரில் அமையும். பாலத்தின் கீழே வழக்கமான வாகன போக்குவரத்திற்கும் வழி செய்யப்படும். இதன் மூலம் அழகர்கோவில் பகுதியிலிருந்து வாகனங்கள் சந்திப்பில் நிற்காமல் கடந்து செல்ல முடியும். இச்சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக இப்பாலம் அமையும் என்றார்.


மேலும் இரு பாலங்கள் அரசு ஒப்புதல்:


போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அண்ணா பஸ் ஸ்டாண்ட் திருவள்ளுவர் சிலையிலிருந்து பாண்டி கோயில் ரிங்ரோடு சந்திப்பு வரை ஒரு உயர்மட்ட பாலமும், ஆவின் சந்திப்பிலிருந்து கே.கே.நகர் சந்திப்பை கடந்து இறங்கும் வகையில் ஒரு உயர் மட்ட பாலமும் அமைக்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இந்த ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிகம். இந்த பாலங்கள் அமைக்க மாநில அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்படும் என மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - madurai,இந்தியா
16-ஜன-202009:04:15 IST Report Abuse
Bala மொதல்ல எல்லா சிலையையும் தூக்கி எங்கயாவது ஊருக்கு ஒதுக்கு புறமா வைங்க தமிழ் நாட்டில பாதி பிரச்சனை தீர்த்திடும்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-ஜன-202007:53:53 IST Report Abuse
ஆரூர் ரங் மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வேயல்ல எனக்கூறி உலகவங்கி அவற்றுக்கான கடன்களை வழங்குவதை நிறுத்தி பல ஆண்டுகளாகிறதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X