பொது செய்தி

தமிழ்நாடு

சம்பாவில் ஆனைக்கொம்பன் கட்டுப்படுத்த கலெக்டர் ஆலோசனை

Added : ஜன 15, 2020
Advertisement

விழுப்புரம் : சம்பா நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ பூச்சியைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில், குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடர் மழையினாலும். தட்பவெப்ப மாறுதல்களினாலும் ஆனைக் கொம்பன் ஈ என்ற பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும்.இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் துார்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைபோல் தோன்றும்.

இதனால் பயிரின் துார்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும்.ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க, நெல் வயலில் களைகள் இல்லாமல் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். குறுகிய கால ரகங்களான ஏ.டி.டி - 45, மத்திய கால ரகமான ஏ.டி.டி., - 39, எம்.டி.யு.,- 3 ஆகியவற்றை நடவு செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களை பயன்படுத்த கூடாது.

பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஸ் உரம் இடவேண்டும். 10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால். ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கார்போசல்பான் 25 சதவீதம் இ.சி., 400 மி.லி. பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி., 500 கிராம், பிப்ரோனில் 0.3 சதவீதம் ஜி 10 கிலோ, குளோர்பைரிபாஸ் 20 சதவீதம் இசி 500 மி.லி., பாசலோன் 35 இ.சி., 600 மி.லி., கார்போசல்பான் 25 சதவீதம் டபிள்யூ ஜி 40 கிராம், குயினைல்பாஸ் 5 சதவீதம் ஜி 2 கிலோ தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X