பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி அறுவடை இயந்திரம் செயல்விளக்க முகாம்

Added : ஜன 15, 2020
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பனப்பாக்கத்தில் பருத்தி அறுவடை இயந்திரம் குறித்த செயல்விளக்க முகாம் நடந்தது.

முகாமிற்கு, வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், 'விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை வட்டாரங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு வேளாண்துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் பருத்தி அறுவடை இயந்திரங்களை அறிமுகம் செய்துள்ளது.பருத்தி இயந்திரத்தின் விலை 7,850 ரூபாய் ஆகும். அரசு மானியமாக 3,500 ரூபாய் வழங்குகிறது.
அரசு மானியம் போக மீதித்தொகை வங்கி வரைவோலையாக எடுத்து வேளாண்துறை அலுவலகங்களை அணுகி விவசாயிகள் பயன்பெறலாம்' என்றார்.வேளாண் உதவி இயக்குநர் மாதவன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X