சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பிரஸ்' ஸ்டிக்கருடன் வாகனங்கள் போலீசார் தடுப்பு நடவடிக்கை

Added : ஜன 15, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டிச் சென்ற வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலி செய்தியாளர்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் பொருட்டு வாகனங்களில் 'பிரஸ்' ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு கட்டுபாடுகள் விதித்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.அரசு வழங்கும் 'பிரஸ்' ஸ்டிக்கர் மட்டுமே வாகனங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும், மற்ற 'பிரஸ்' ஸ்டிக்கர் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையொட்டி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக 'பிரஸ்' ஸ்டிக்கருடன் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி தீவிர விசாரணை நடத்தி, ஸ்டிக்கரை அகற்றினர்.மேலும், அரசு வழங்கும் 'பிரஸ்' ஸ்டிக்கர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், அச்சிடப்பட்ட ஸ்டிக்கரினை பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X