பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை நபருக்கு 2 ஆண்டு சிறை: கீழக்கரை தாசில்தார் உத்தரவு

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பொது அமைதி உறுதி மொழியை மீறியதற்காக இலங்கையை சேர்ந்தவரை 2 ஆண்டுகள் சிறையில் அடைக்க தாசில்தார் வீரராஜா உத்தரவிட்டார்.

இலங்கை கொழும்பு கிராண்ட் பாஸ் பகுதியை சேர்ந்தவர் முகமது ரிபாஸ் 35, இவர் 2009 ல் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். மண்ணடியில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த அவர், கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த ரோஷன் சல்மாவை 2011 ல் திருமணம் செய்து 4 குழந்தைகளுடன் கீழக்கரையில் வசித்து வந்தார்.

2014 ல் போதை மருந்து கடத்தல் வழக்கில் இவர் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். 2018 ஏப்., 1 ல் வாட்ஸ்ஆப் குழு ஆரம்பித்து ஹிந்து பிரமுகர்களை கொலை செய்யவும், சிறையில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகளை உயிரை கொடுத்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வந்ததாக இவர் மற்றும் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர்.

இவ் வழக்கில் ஜாமின் பெற்ற முகமது ரிபாஸ் 2019 நவ., 20 ல் கீழக்கரை தாசில்தார் முன்பு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன் என 2 ஆண்டுகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் உறுதிமொழி ஆவணம் எழுதி கொடுத்தார்.

2019 நவ. 29 ல் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்று தெரியவந்ததால் உரிய ஆவணங்களின்றி தங்கியதாக போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர் இந்தியர் என்று பொய்யான தகவல் தந்ததால், உறுதி மொழி ஆவணத்தை மீறியதாக கீழக்கரை தாசில்தார் வீரராஜா இவரை இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு புழல் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது போன்று தாசில்தார் சிறையில் அடைக்க உத்தரவிடுவது அரியதாகும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
16-ஜன-202007:46:21 IST Report Abuse
Girija இப்போ சொல்லுங்க என் ஆர் சி மற்றும் சி ஏ ஏ இந்தியாவிற்கு கட்டாயம் தேவையா இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X