பொது செய்தி

இந்தியா

370வது பிரிவு நீக்கத்திற்கு ராணுவ தளபதி பாராட்டு! பயங்கரவாதத்தை தூண்டும் பாக்.,குக்கு எச்சரிக்கை

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
370_பிரிவு, பாராட்டு, ராணுவ_தளபதி, பாக்., பயங்கரவாதம், எச்சரிக்கை

புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சாசனத்தின்,370வது பிரிவு நீக்கப்பட்டது, மிகச் சிறந்த நடவடிக்கை' என, ராணுவத் தளபதி, ஜெனரல் எம்.எம். நரவானே கூறியுள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த, 72வது ராணுவ தின விழாவில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, ராணுவத் தளபதி, ஜெனரல் எம்.எம். நரவானே பேசியதாவது: பயங்கரவாதத்தை இந்தியா சகித்து கொள்ளாது. அதை ஆதரிப்பவர்களை தடுப்பதற்கு நமக்கு பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்த நாம் தயங்க மாட்டோம். அந்த வகையில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மிகவும் சரியான நடவடிக்கையாகும். இதன் மூலம், நமது நாட்டுக்கு மேற்கே உள்ள அண்டை நாடு மற்றும் அதன் ஆதரவாளர்களின் சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.

சிறப்பு அந்தஸ்து ரத்தின் மூலம், இந்தியாவுடன், ஜம்மு - காஷ்மீர் முழுமையாக இணைக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு என்பது, ஜம்மு - காஷ்மீரில் உள்ள நிலைமையைப் பொறுத்து அமைகிறது. தற்போது, அங்கு நிலைமை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த ராணுவ தினத்தில், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறோம். அடுத்த தலைமுறையினருக்கு அவர்கள் ஊக்க சக்தியாக அமைந்துள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார். இந்த ராணுவ அணிவகுப்பில், தனுஷ் ஏவுகணை மற்றும் கே-வஜ்ரா பீரங்கி ஆகியவை முதல் முறையாக காட்சிபடுத்தப்பட்டன.


சீனா மீண்டும் சீண்டல்:

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு நீக்கப்பட்டது. இதற்கு, நமது அண்டை நாடான பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதன் நட்பு நாடான சீனா, இந்தப் பிரச்னையை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் முன்வைத்தது. பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற நான்கு நிரந்தர உறுப்பு நாடுகளான, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல், கவுன்சிலில் உள்ள மற்ற நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளும், இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

'ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை' என, அந்த நாடுகள் கூறின. அதையடுத்து, சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது. இரண்டாவது முறையாகவும், காஷ்மீர் விவகாரத்தை சீனா, கவுன்சிலில் எடுத்து வந்தது. அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், மூன்றாவது முறையாக, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க, சீனா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையில், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய அமைச்சர்கள் குழு, ஜம்மு - காஷ்மீருக்கு செல்ல உள்ளது. டில்லியில் நாளை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது. அமைச்சர்கள் குழு பயணத்துக்கான ஏற்பாட்டை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னின்று எடுத்து வருகிறார். ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், வரும், 19ல் ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.


பயங்கரவாதி சுட்டுக்கொலை:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினை சேர்ந்த, பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். அவர்கள் மீது, இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த சம்பவத்தில், பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான, ஹரூன் வானி கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து, ஏ.கே.,௪௭ ரக துப்பாக்கி, சீன கையெறி குண்டு, ௭௩ ரவுண்ட் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. பனி அடந்த பகுதிக்குள் தப்பி சென்ற, மற்றொரு பயங்கரவாதியை தேடும் பணி தொடர்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202018:14:53 IST Report Abuse
Malick Raja Respected Commander ... Please do the needful action thru only .. since 1948 talking only done .. so far nothing done thru physical action .Once Physical acts done then only bring consequences ...
Rate this:
Cancel
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
16-ஜன-202015:46:56 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAM ராணுவ தளபதி ஆளும் கட்சியில் தளபதி போல் பேசுகிறார். எப்படியோ மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முப்படை தலைமை அல்லது கவர்னர் பதவிக்கு அடித்தளம் அமைப்பது போல் தோன்றுகிறது. ராணுவத்திலும் அரசியல் கொஞ்சம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
16-ஜன-202013:01:31 IST Report Abuse
Indian  Ravichandran சூப்பர் சார், இப்பொது பாக்கிகள் சவுண்ட் கொஞ்சம் கம்மிதான், இங்க தமிழ் நாட்டில் தான் பயங்கர வாதிகள் மற்றும் தேச துரோக அரசியல்வாதிகள் அதிகம், உங்க துப்பாக்கியை இந்தப்பக்கம் நீட்டமா இது அடங்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X