அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஜன 15, 2020
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் பொங்கல் விழாவை யொட்டி, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட செயலர் வெங்கடேசன் தலைமை தாங்கி, 500 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் கரும்பு வழங்கி பேசுகையில், 'வறுமை மற்றும் ஊழலை ஒழிப்பதே தே.மு.தி.க.வின் நோக்கமாகும். அந்த பாதையில் தான் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். நாங்கள் எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர்கள் அதிகம் உள்ளனர். 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொண்டு, சமூக வலைதளங்கள் மூலம் எங்களை கேலி, கிண்டல் செய்து தாக்கி வருகின்றனர். தே.மு.தி.க.,வைப் பற்றி சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து மதத்தினருக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் ஆதரவாகவும், பாதுகாப்பு அரணாகவும் இருப்பது தே.மு.தி.க., தான்' என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் தயாநிதி, துணைச் செயலர்கள் சூடாமணி, புருஷோத்தமன், மாநில விஜயகாந்த் மன்ற துணைச் செயலர் ராஜா சந்திரசேகர், பொதுக்குழு முருகன், ஜெயசீலன், தேசம் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X