கிரீன் பாரடைஸ் பள்ளியில் இயற்கை உணவு கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிரீன் பாரடைஸ் பள்ளியில் இயற்கை உணவு கண்காட்சி

Added : ஜன 15, 2020

திண்டிவனம் : ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் இயற்கை உணவுகளின் கண்காட்சி, விவசாய வகுப்புக்கள் மற்றும் சிறுவர் பூங்கா துவக்க விழா நடந்தது.

பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். பெரிய தச்சூர் சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில், 200 வகையான இயற்கை உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. உணவு நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கான, விவசாய வகுப்பை, இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் முன்னிலையில் துவங்கியது.வேர்க்கடலை, சோளம், வெண்டை, காய்கறிகள், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பெற்றோர் உதவியுடன் மாணவர்களால் விதைக்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் மீன்களுடன் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்காவை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

விழாவில், விவசாய வகுப்புகளுக்கு உதவிபுரிந்த பெற்றோர்களுக்கு, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினர்களை கென்னடி கல்விக் குழுமச் செயலர் சந்தோஷ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் சண்முகம் நன்றி கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X