பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் முருகன் கோவிலில் தைப் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Share
Advertisement

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் தைப் பொங்கல் விழா நடந்தது.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நடந்த விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவகிரக சுவாமிக்கு சந்தனம், தேன் உள்ளிட்ட நறுமண பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர்.

இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கிரிவலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X