வள்ளியம்மை கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளியம்மை கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 15, 2020

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழாவையொட்டி பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தது.

திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி நடந்தது. கல்லுாரி தலைவர் பூபதி தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பாபு வரவேற்றார்.மாணவிகளுக்கு கோலம், உறியடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நிறைவாக புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கல்லுாரி துணை முதல்வர் தென்னரசி, துறை பேராசிரியர்கள் ரீனா, சத்யபிரியா, நாராயணசாமி, பாலமுருகன், பழனிராஜ், பாக்கியலட்சுமி, ஜெனித், வாசுகி, ஜானகி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். வணிகவியல் துறை பேராசிரியர் பவானி தேவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X