பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்

Added : ஜன 15, 2020

திருக்கோவிலுார் : ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் தேர்தலுக்கான கருத்து கேட்பு கூட்டம் மணலுார்பேட்டையில் நடந்தது. கோட்ட பொறுப்பாளர் பாலாஜி தலைமை தாங்கினார். கோட்ட அமைப்பு செயலர் குணசேகரன், இணை பொறுப்பாளர் அருள், முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் முன்னிலை வகித்தனர்.தேர்தல் அதிகாரி முருகன் நிர்வாகிகள் தேர்தல் குறித்து கருத்து கேட்டு தேர்தலை நடத்தினார். இதில், ஒன்றிய தலைவராக சேகர் தேர்வு செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X