மம்தாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது வழக்கு

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (8)
Advertisement
Mamta, Students,Kolkata,மம்தா, முற்றுகை, மாணவர்கள், வழக்கு

கோல்கட்டா : கோல்கட்டாவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியை மாணவர்கள் முற்றுகையிட்டனர். அவர்களில் 150 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஜன.,11ல் கோல்கட்டா வந்திருந்தார். அங்குள்ள, துறைமுக பொறுப்பு கழகத்தின், 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். பிரதமர் மோடி தங்கியிருந்த இடத்திற்கு அருகே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, இடதுசாரி மாணவர் அமைப்பினர், ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு வந்து, பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமரை சந்தித்த பின் வெளியே வந்த மம்தாவை, இடதுசாரி மாணவர்கள் முற்றுகையிட்டு, மோடியை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது எனக்கூறிய, மம்தா, மாணவர்கள் போராட்டத்திலும் சிறிது நேரம் பங்கேற்றார். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற, அடையாளம் தெரியாத, 150 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உட்பட ஜாமின் பெறமுடியாத சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
16-ஜன-202016:52:59 IST Report Abuse
Bhagat Singh Dasan மாணவர்கள் இனியாவது இந்த அரசியலவ்யாதிகளை புரிந்துக்கொள்ளவேண்டும். JNU வில் மட்டும் தான் கருத்து சுதந்திரமா? மற்ற இடத்தில் கிடையாதா, இதை கேட்க வேண்டிய உண்டியல்கள் கேட்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-202016:01:19 IST Report Abuse
Endrum Indian 1)இதே மாணவர்கள் கவர்னரை எதிர்த்தபோது ஒரு நடவடிக்கையும் இல்லை. இவரை எதிர்த்தால் உடனே நடவடிக்கை. கொல்கத்தா போலீசின் நன்றிக்கடனே நன்றிக்கடன்???? இவரால் நாட்டுக்கு ஒருக்காலும் நன்மை பயக்காது இது சர்வ நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202015:18:35 IST Report Abuse
Lion Drsekar மம்தா பேகம் எளிமையின் சின்னம் ஆனால் குணத்தில் .,,குழந்தைகளிடமும் கரிசனம் இல்லாத அளவுக்கு ,,,,, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X