பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் மகரஜோதி பக்தர்கள் பரவசம்

Added : ஜன 15, 2020
Advertisement
சபரிமலையில் மகரஜோதி பக்தர்கள் பரவசம்

சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சுவாமி கும்பிட்டு மலை இறங்கினர்.

டிச.,30ல் தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மகரவிளக்கு பெருவிழா நடந்தது. நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தொடங்கிய நெய்அபிஷேகம் பகல் 11:00 மணி வரை நடந்தது. உச்சபூஜைக்கு பின்னர் பகல் 1:00மணிக்கு நடை அடைக்கப்பட்டது.மாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார்.

பந்தளத்தில் இருந்து ஜன. 12ல் புறப்பட்ட திருவாபரணபவனி நேற்று மாலை 5:40 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6:35 மணிக்கு சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது.

இரண்டு பெட்டிகள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.ோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மாலை 6: 45-க்கு தீபாராதனை நடந்தது. தீபாராதனை முடிந்த சில வினாடிகளில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர்.

பொன்னம்பலமேட்டில்பின்னர் மாலை 6:50 மணி முதல் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X