பொது செய்தி

இந்தியா

இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

Added : ஜன 15, 2020
Advertisement
இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

சபரிமலை: இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் பாடல்கள் பாடுவோர், இசை அமைப்பவர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் 2012 முதல் ஆண்டு தோறும் ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது. கர்நாடக இசைக் கலைஞர்கள் ஜேசுதாஸ், விஜயன், பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீகுமார், கங்கை அமரன், சித்ரா, பி.சுசீலா உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சபரிமலையில் நேற்று நடந்தது. ராஜு ஆபிரகாம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தேவசம்போர்டு தலைவர் வாசு வரவேற்றார். இளையராஜாவுக்கு கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விருது வழங்கினார். விருதில் ரூ.1 லட்சம், சான்றிதழ் அடங்கும்.

விருது வாங்கி பேசிய இளையராஜா, ''ஐயப்பன் அழைத்து இந்த விருதை தந்துள்ளார். அவர் விரும்பாமல் சபரிமலைக்கு யாரும் வரமுடியாது. இருமுடியுடன் வந்தால் பாவங்கள் சபரிமலையில் களையப்படும்' என்றார். ஒரு பாடலும் பாடினார்.

தேவசம்போர்டு உறுப்பினர்கள் ரவி, விஜயகுமார், ஆன்டோ ஆன்டணி எம்.பி., தேவசம்போர்டு ஆணையர் திருமேனி, செயலாளர் ஜோதிலால், கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ரவிகுமார், சபரிமலை உயர்மட்டக்குழு தலைவர் நீதிபதி ஸ்ரீராஜன், நீதிபதி ராமன், சிறப்பு ஆணையர் எம்.மனோஜ் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X