பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 15, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம், திண்டிவனம், அவலுார்பேட்டை, செஞ்சி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தும்பூர்விழுப்புரம் அடுத்த தும்பூர் நேஷனல் அகாடமி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி நிர்வாகிகள் செல்வகுமார், சரவணன் தலைமை தாங்கினர். புவனா, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தலைமை ஆசிரியை லேனாபிரதா உட்பட பலர் பங்கேற்றனர்.மயிலம்மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா, பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் தலைமையில் நடந்தது. கல்லுாரி செயலர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.

கல்லுாரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டனர். பின்னர் கயிறு இழுத்தல், உறியடித்தல், கபடி, கோகோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திண்டிவனம்திண்டிவனம் புனித பிரான்சிஸ் டி அசிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் தினவிழா நடந்தது.

விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோலப்போட்டி, கபடி, உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பிரான்சிஸ் குழந்தைசாமி ரொக்கப்பரிசு வழங்கி, மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாடவும், பொங்கல் தினத்தின் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். விழாவில், மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பள்ளி மாணவி நர்கீஸ்பானு நன்றி கூறினார்.விக்கிரவாண்டிவிக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் போலீசார் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினர்.

போலீஸ் நிலையத்தில் நடந்த பொங்கல் விழாவிற்கு இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமை தாங்கினார். போலீசார் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினர். சப் இன்ஸ்பெக்டர் மருது, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனாரப்பன், கலியமூர்த்தி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.அவலுார்பேட்டைசெஞ்சி அடுத்த அண்ணமங்கலத்தில் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி தலைவர் பப்ளசா தலைமை தாங்கினார். செயலர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார், அறக்கட்டளை உறுப்பினர் அனுராக் முன்னிலை வகித்தனர்.

கல்லுாரி முதல்வர் டாக்டர் அல்லாபிச்சை வரவேற்றார். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்கள், அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர்.மேல்மலையனுார்மேல்மலையனுார் கங்கா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, தாளாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசும், இனிப்பும் வழங்கப்பட்டது. திண்டிவனம்திண்டிவனம் தமிழ்ச்சங்கம், வி.கே.எம். வித்யாலயா பள்ளி சார்பில் நடந்த தமிழர் திருநாள் விழா ஓமந்துாரில் நடந்தது. பள்ளி தாளாளர் கமலக்கண்ணன், பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்ச்சங்கத் தலைவர் மாணிக்கம் வரவேற்றார். பள்ளி தமிழாசிரியர் தமிழ்தாசன் துவக்கவுரையாற்றினார்.மூன்று அமர்வுகள் கொண்ட கவியரங்கம், பட்டிமன்றம் மற்றும் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தது. விழாவில் மயிலம் தமிழ்க்கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விருதாளர்களுக்கும் பரிசு வழங்கினார்.

விழாவில், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க தேசிய தலைவர் பெரியண்ணன், பொதுச் செயலர் இதயகீதம், ராமானுஜம் பேசினர்.தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச் சங்கங்கள், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். கண்டாச்சிபுரம்போலீஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு, டி.எஸ்.பி., நீதிராஜன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். போலீஸ் நிலைய வளாகத்தில் பொங்கல் பானையில் பொங்கலிட்டு, சூரியனை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் ரவி, மாதையன், முரளி கிருஷ்ணன், ரவி, ராஜமன்னார் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.விழுப்புரம்விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் கயல்விழி முன்னிலை வகித்தார். இதில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணித்து, பொங்கல் வைத்து கொண்டாடினர். மாணவர்களுக்கு உறியடித்தல், சாக்குபோட்டி, பாட்டு, பேச்சு. கவிதை, கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர் செந்தில்குமார், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியை சவிதா நன்றி கூறினார்.செஞ்சிகளையூர், நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் பொங்கல் விழாவிற்கு, செயலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இயக்குநர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். துறை தலைவர்கள் ராஜேந்திரன், மாணிக்கவேல், முரளிதரன், சதாசிவம், சங்கிலீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். விழாவில், பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.அக்ஷர்தம் சென்டரல் பள்ளிபள்ளி தாளாளர் மகாலட்சுமி லட்சுமணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஷார்லக் மேரி முன்னிலை வகித்தார். நிறுவனர் லட்சுமணன் பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுடன், ஆசிரியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். உறியாட்டம், கோலாட்டம், கும்மி, பொங்கல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி, ஆசிரியைகள் சுகன்யா, விஜயாதேவி, மோகனபிரியா, ஜெனிபர், ஆர்த்தி மற்றும் எட்வின், செங்குட்டுவன், சற்குணம், ரவி, ஏழுலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X