பொது செய்தி

இந்தியா

அரசு, தனியார் நிறுவனங்களில் யோகா இடைவேளை அமல்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Advertisement
அரசு, தனியார் ,நிறுவனங்கள், யோகா, இடைவேளை ,அமல்

புதுடில்லி: பணியின் போது ஏற்படும் சோர்வு, மன உளைச்சல், நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில், ஐந்து நிமிட யோகா இடைவேளை திட்டத்தை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான சோதனை திட்டம் துவங்கியுள்ளது.

இது குறித்து, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: பணியில் ஏற்படும் சோர்வு, நெருக்கடி போன்ற பிரச்னைகளை சமாளிக்க, அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, யோகா இடைவேளை திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.டில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையம் இதற்கான எளிய பயிற்சி முறையை வடிவமைத்துள்ளது. பல யோகா நிபுணர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, இந்த எளிய பயிற்சி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பயிற்சி வகுப்பு அல்ல. யோகா குறித்த ஒரு அறிமுகமே. நாற்காலியில் எப்படி உட்கார வேண்டும், உடல் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை பயிற்சி முறைகள் தெரிவிக்கப்படும். இதற்கான கையேடு மற்றும் சில நிமிட, 'வீடியோ' தயாரிக்கப்பட்டுள்ளது. இவை அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து ஊழியர்களும் சேர்ந்து, இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த, டாடா கெமிக்கல்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்பட, 15க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த திட்டத்தை அனைத்து நிறுவனங்களிலும் செயல்படுத்தும்படி, தொழில் அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
16-ஜன-202006:58:06 IST Report Abuse
blocked user ஐந்து நிமிடம் போதாது. குறைந்தது 20 நிமிடம் தேவை. 20 நிமிடம் செலவு செய்தால் நீங்காத சுறுசுறுப்பு நாள் முழுவதும் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X