சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் சாப்பிட்ட இரு குழந்தைகள் பலி

Added : ஜன 15, 2020
Advertisement
பொங்கல் சாப்பிட்ட இரு குழந்தைகள் பலி

திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே பொங்கல் சாப்பிட்ட இரு பெண் குழந்தைகள் பலியாகினர்.திருப்பத்துார் அடுத்த அம்மணாங்கோயிலைச் சேர்ந்தவர் சுரேஷ் 35; விவசாயி. இவரது மனைவி பிரியா 30; இவர்களுக்கு ஜெயஸ்ரீ 5, தனுஸ்ரீ 3 என இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.

ஜெயஸ்ரீ அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார். நேற்று பகல் 1:00 மணிக்கு சுரேஷ் வீட்டில் பொங்கல் பண்டிகை நடந்தது. அப்போது பொங்கல் செய்து சுவாமிக்கு படையலிட்டனர்.

பின் இரு பெண் குழந்தைகளும் பொங்கல் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் இருவரும் வாந்தி எடுத்தனர். உடனடியாக அவர்களை திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்கள் சாப்பிட்ட பொங்கல் 'புட் பாய்சன்' ஆனதால் இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்றம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X