1984 சீக்கிய கலவரம்: மத்திய அரசு விளக்கம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (4)
Advertisement
1984 ,சீக்கிய_கலவரம்,சிறப்பு,விசாரணை_குழு, வழக்கு_பதிவு

புதுடில்லி: டில்லியில், 1984ல் நடந்த சீக்கிய கலவரம் தொடர்பான, 186 வழக்குகள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாகவும், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா, 1984, அக்டோபரில், அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, டில்லியில் கலவரம் வெடித்தது. சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில், டில்லியில் மட்டும் 2,733 பேர் பலியாகினர். இந்த கலவரம் தொடர்பாக, 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை விசாரிக்கப்பட்டு, முடித்து வைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த வழக்குகள், நியாயமான முறையில் விசாரிக்கப்படவில்லை என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை, 2018ல் அமைத்தது. இந்த குழு நடத்திய விசாரணையில், 1984 கலவரத்தில், பல போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு விசாரணை குழுவின் பரிந்துரை ஏற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-ஜன-202008:10:17 IST Report Abuse
ஆரூர் ரங் முக்கிய நம்பர் ஒன் குற்றவாளி இந்தக்குற்றத்திற்கான தண்டனையை பயங்கரவாதம் மூலமே பெற்றது எல்லோருக்கும் ஒரு பாடம்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-ஜன-202008:09:16 IST Report Abuse
ஆரூர் ரங் நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ராஜீவ் கட்சி ஆட்களுக்கு துணை புரிந்தார்கள். படுகொலைக்கான உத்தரவே காங்கிரஸ் மேலிடத்திலிருந்து வந்ததால் எக்காலத்திலும் விசாரணை நிறைவு பெறாது . ஏனெனில் போலீஸ் லஞ்ச ஊழலை கண்டும் காணாமல் இருந்ததற்கான நன்றிக்கடன் போலீஸ் அதிகாரிகளிடமுண்டு .ராஜீவ்தான் படுகொலைக்கு உத்தரவிட்டது என அகாலிதள் தலைவர் பாதல் மக்களவையில் பேசியது குறிப்பிடத்தக்கது
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
16-ஜன-202007:04:05 IST Report Abuse
blocked user கமல்நாத் என்ற தலைமை கொலைகாரன் முதல்வராகவே இருக்கிறான். அநீதித்துறையால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பல நூற்றாண்டுகளாக இந்துக்களின் காவலர்களாக இருந்த சீக்கியர்களை கொத்துக்கொத்தாக கொன்ற பொழுது இந்துக்கள் அமைதி காத்து தீராத பாவத்தை சேர்த்துக்கொண்டார்கள். அதனால்தான் என்னவோ காஷ்மீரில் இருந்து இந்துக்கள் முழுவதுமாக விரட்டப்பட்டார்கள். இந்துக்களை இந்தியாவில் இருந்து முழுவதும் விரட்டுவதற்கு முன்னாவது ஆழ்ந்த நித்திரையில் இருந்து விழித்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X