பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறளும், விளக்கமும் அசத்தும் 'மணிக்கூண்டு'

Added : ஜன 15, 2020
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட பழமையான மணிக்கூண்டு, நேரத்தை அறிவிப்பதுடன், மணிக்கு ஒரு முறை திருக்குறள் வாசித்தும் அசத்துகிறது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள பழமையான மணிக்கூண்டு மற்றும் அங்குள்ள பூங்கா, முறையான பராமரிப்பின்றி பழுதானது. மணிக்கூண்டை, பழமை மாறாமல் புதுப்பித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மணிக்கூண்டை சீரமைத்தல், வண்ணம் பூசுதல், புதிதாக கடிகாரம் பொருத்துதல், அங்குள்ள கிளமென்சோ பூங்காவை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சப்தம் எழுப்பும். நேரத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிக்கும். மணி அடித்து முடிந்ததும், ஒரு திருக்குறள், அதற்கான விளக்க உரையுடன் ஒலிக்கிறது. அதற்காக, 1,330 திருக்குறளும், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரிசைப்படி, ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள், ஒலிபரப்பாகும். இந்த ஏற்பாடு, பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X