பொது செய்தி

தமிழ்நாடு

காங். கட்சி செயல் வீரர்கள் கூட்டம்

Added : ஜன 15, 2020
Advertisement

மயிலம் : மயிலம் தெற்கு வட்டார காங். கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கூட்டேரிப்பட்டில் நடந்தது.

கூட்டத்திற்கு, தெற்கு வட்டார தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் சந்திரன் வடக்கு வட்டார தலைவர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர். முன்னாள் வட்டார தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார்.கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சுப்பையா உட்பட பலர் பேசினர்.மாவட்ட செயலர் அர்சுனன், நிர்வாகிகள் கோதண்டபாணி, நாகப்பன், மதன், தாமோதரன், கோபாலகிருஷ்ணன், தேவேந்திரன், ரவிச்சந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி அதிக இடங்கள் கேட்டு போட்டியிடுவது. பா.ஜ., கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோருதல். மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X