பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் போக்குவரத்து மாற்றம்

Added : ஜன 15, 2020
Advertisement

மதுரை: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஜன.,18 முதல் 31 வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம்:மதுரை-பழநி பயணிகள் ரயில் (56624) ஜன.,18 முதல் 22 வரை நேரம் மாற்றம் செய்யப்பட்டு மதுரையில் இருந்துதினமும் காலை 6:30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் காலை 10:00 மணிக்கு பழநியைஅடையும்.மதுரை - செங்கோட்டை (56734), செங்கோட்டை-மதுரை (56735) பயணிகள் ரயில்கள் ஜன.,19 முதல் 29 வரை 26ம் தேதி தவிர மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படும்.நாகர்கோவில்-கோவை (56319), கோவை-நாகர்கோவில் (56735) பயணிகள் ரயில் ஜன.,19 முதல் 24 வரை விருதுநகர் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்.ராமேஸ்வரம்-ஐதராபாத் (07686) சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு பதிலாக 7:45 மணிக்கு புறப்படும்.திருநெல்வேலி-ஈரோடு பயணிகள் ரயில் (56822) ஜன.18, 19, 21, 22 ஆகிய நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து 1:55 மணி நேரம் தாமதமாக புறப்படும்.திருநெல்வேலி-திண்டுக்கல்-மயிலாடுதுறை இணைப்பு ரயில் (56822) திண்டுக்கல்லில் இருந்து ஜன.,18 அன்று 55 நிமிடமும், 19 முதல் 22 வரை 1:35 மணி நேரமும் தாமதமாக புறப்படும், என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X