சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழப்பம்! விழுப்புரம் பைபாஸ் கூட்ரோட்டில் வாகன ஓட்டிகள்... அறிவிப்பு பலகை, பிளிங்கர் அமைக்க கோரிக்கை

Added : ஜன 15, 2020
Advertisement
 குழப்பம்! விழுப்புரம் பைபாஸ் கூட்ரோட்டில் வாகன ஓட்டிகள்... அறிவிப்பு பலகை, பிளிங்கர் அமைக்க கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஜானகிபுரம் புறவழிச்சாலை கூட்ரோட்டில் அறிவிப்பு பலகை மற்றும் பிளிங்கர் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அருகே ஜானகிபுரம் புறவழிச்சாலை கூட்ரோடு அமைந்துள்ளது. இந்த கூட்ரோடு வழியாக, புதுச்சேரி, கடலுார், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி மார்க்கத்திற்கும், திருச்சி மார்க்கத்திலிருந்து விழுப்புரம், புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட மார்க்கத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், ஜானகிபுரம் கூட்ரோடு பகுதியில், விழுப்புரம், திண்டிவனம், சென்னை மற்றும் திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் பிரிந்து செல்லும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகை, கூட்ரோட்டிற்கு மிக அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், கூட்ரோட்டில் திரும்ப முடியாமல், நேராக செல்லும் நிலை நீடித்து வருகிறது. சில சமயங்களில் வாகன ஓட்டிகள் சட்டென்று பிரேக் பிடிப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.இதேபோன்று, கூட்ரோடு இருப்பதை தெரிவிக்கும் வகையில் பிளிங்க்கர் எனப்படும் விபத்து தடுப்பு விளக்குகள் இங்கு அமைக்கப்படவில்லை. இதனால், கூட்ரோடு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில் குழப்பம் ஏற்படுகிறது.

மேலும், திருச்சி மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களுக்கு விழுப்புரம், புதுச்சேரியை குறிக்கும் வகையில் சாலையோரத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகை இருப்பதும், வாகன ஓட்டிகளுக்கு தெரியாத அளவிற்கு உள்ளது.இதனால், விழுப்புரம், புதுச்சேரி செல்லும் வாகன ஓட்டிகளும் குழப்பம் அடைந்துள்ளனர். சில சமயங்களில் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்லும் பகுதிக்கு, கூட்ரோடு பகுதியில் சட்டென்று திரும்புவதால் பை பாஸ் சாலையில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஜானகிபுரம் புறவழிச்சாலை கூட்ரோடு பகுதியில் விழுப்புரம் சாலையில் பிளிங்கர் விளக்கு மற்றும் ஊர்களின் அறிவிப்பு பலகைகளை ஒரு குறிப்பிட்ட மீட்டர் துாரத்திற்கு முன்பு வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X