பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ரயில்வே பழைய லோகோ ெஷட்

Added : ஜன 15, 2020
Share
Advertisement

விழுப்புரம் ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில்களை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பழைய லோகோ ெஷட் புதர்கள் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.தமிழகத்திற்கு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், ரயில் போக்குவரத்திற்கு முக்கிய சந்திப்பாக விழுப்புரம் ரயில் நிலையம் உள்ளது.

இதனால், இங்கு தினமும் பயணிகளின் கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம்.இங்குள்ள ரயில்களின் இன்ஜின்கள் பராமரிப்பு செய்யும் பணிகளுக்கு, ஆங்கிலேயர் காலத்தில் விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் லோகோ ெஷட் கட்டப்பட்டது. இங்கு, இன்ஜின்களைக் கொண்டு செல்ல தண்டவாள வசதிகள் அமைக்கப்பட்டு, இன்ஜின்களை சீரமைக்கும் சாதனங்களும் தொழில்நுட்ப அளவில் இங்கு அமைக்கப்பட்டிருந்தது.இந்த இடம், காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி விடப்பட்டதால், லோகோ ெஷட் முற்றிலுமாக வீணாகியது.

இதையடுத்து, விழுப்புரம் ரயில் நிலையத்தில், கடைசி பகுதியில் தற்போது ரயில்கள் பராமரிப்பு பணிக்கான இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு இதற்கான பணிகள் நடக்கிறது. பழைய லோகோ ெஷட்டை ரயில்வே அதிகாரிகள் யாரும் கவனிக்காததால், அங்குள்ள கட்டடங்கள் முற்றிலுமாக பாழடைந்ததோடு, அந்த இடம் முழுவதையும் முட்புதர்கள் அடர்ந்து சூழ்ந்து மூடியுள்ளது.இது போன்ற சூழலை பயன்படுத்தி, போதை ஆசாமிகள் மட்டுமின்றி ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்து, சூதாட்டம் போன்ற சட்ட விரோத செயல்களை செய்துவிட்டு, போலீசாரிடம் தலைமறைவாகும் ஆசாமிகள் லோகோ ெஷட்டில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் தங்கும் இடமாக மாறியுள்ளது.

மேலும், இங்குள்ள, ரயில்வே துறைக்கு சொந்தமான சில இரும்பு பொருட்களையும் கூட, மர்ம நபர்கள் சிலர் கழற்றி திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கிறது. இதை ரயில்வே அதிகாரிகள் கண்காணித்து, அங்குள்ள புதர்களை அழிப்பதோடு, கட்டடத்தை முற்றிலுமாக இடித்து, அங்குள்ள இரும்பு பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X