பொது செய்தி

தமிழ்நாடு

பாரதிதாசன் பல்கலை நேர்காணல் ஒத்திவைப்பு

Added : ஜன 15, 2020
Advertisement

திருச்சி: பாரதிதாசன் பல்கலையில் 28 துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் ஒத்தி வைக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலையில், 28 துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, நேர்காணல் அறிவிக்கப்பட்டிருந்தது. டிச., 21 முதல் 25ம் தேதி வரை, உதவி பேராசிரியர்களுக்கும், ஜன. 22, 24 மற்றும் 25ம் தேதிகளில் பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட இருந்தது.

பாரதிதாசன் பல்கலையில், ஒட்டுமொத்த பல்கலையும் ஒரே அலகாக கருதப்பட்டு, பணி நியமனத்தில், 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

'ஒவ்வொரு துறையையும், ஒரு அலகாக கருதி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் போது, அனைத்து பிரிவினருக்கும் பணி வாய்ப்பு கிடைக்கும். ஒட்டுமொத்த பல்கலையும் ஒரே அலகாக கருதி, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினால், பணி நியமனத்தில் குளறுபடிகள் ஏற்படும்' என புகார் எழுந்தது.

இதனால், 'பல்கலை அலகு' முறையில் பணி நியமனத்துக்கு, அரசு தரப்பில் ஒப்புதல் கிடைக்கவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால், நேர்காணல் ஒத்தி வைக்கப்படுவதாக, 14ம் தேதியிட்டு, பதிவாளர் பெயரில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X