பொது செய்தி

இந்தியா

'பிரச்னைகளை கண்டு இந்தியா ஒதுங்கி நிற்காது'

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (9)
Advertisement
பிரச்னை, இந்தியா, ஜெய்சங்கர், சவால்கள், பயங்கரவாதம்

புதுடில்லி: '' சர்வதேச அளவிலான எந்த பிரச்னையிலும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல், தீர்க்கமான முடிவெடுப்பது, இந்தியாவின் கொள்கை,'' என, மத்திய வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அவர், டில்லியில் நடைபெற்ற, பன்னாட்டு மாநாட்டில் பேசியதாவது: இந்தியா, சர்வதேச பிரச்னைகளில் வணிக ஆதாயம் உள்ளதா என ஆராய்ந்து, அதற்கேற்ப முடிவுகளை எடுக்காது. அதுபோல, எந்த விவகாரத்திலும் தலையிட்டு இடையூறு விளைவிக்காது. அதே நேரத்தில், பிரச்னைகளை தள்ளி நின்று வேடிக்கையும் பார்க்காது. அவற்றுக்கு தீர்வு காண முயலும். அத்துடன், எந்த ஒரு பிரச்னையிலும், தன் முடிவை, இந்தியா உறுதியாக தெரிவிக்கும். இதற்கு, பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை உதாரணமாக கூறலாம்.

இந்தியா-சீனா நல்லுறவில், பரஸ்பரம் இரு நாடுகளும் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பில்லை. நம் உறவு தனித்துவமானது. அதுபோல, உலகின் ஒவ்வொரு நாடும் இருக்க வேண்டும். இரு நாடுகளின் உறவில், ஏற்ற, இறக்கமற்ற நிலை வேண்டும். இந்தியா- அமெரிக்கா நாடுகள், இணைந்து செயல்படாத துறையே இல்லை எனலாம். உலக நாடுகளுக்கு, பொதுவான சவால்கள் பல உள்ளன. உதாரணமாக, பயங்கரவாதம், பிரிவினை, குடிபெயர்வு உள்ளிட்டவற்றை கூறலாம். இவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதை, உலக நாடுகள், தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
16-ஜன-202019:01:15 IST Report Abuse
பாமரன் தேவையில்லாமல் தேரை இழுத்து தெருவில் விடறார்... கடந்த ஆறு வருஷத்தில் எந்த சர்வதேச பிரச்சினைக்கு இந்தியா சார்பில் கருத்து சொல்லப்பட்டிருக்குன்னு யாராவது கேட்டால்.... அப்புறம் பெப்பெப்பேபேபேதான்... (ஒரே ஆறுதல்...ஆறு வருடங்கள் முன்னாடியும் கிட்டத்தட்ட இதே நிலைதான்.,.)
Rate this:
Share this comment
மணிவாசகம் - உறையூர்,இந்தியா
18-ஜன-202021:26:53 IST Report Abuse
மணிவாசகம்//கடந்த ஆறு வருஷத்தில் எந்த சர்வதேச பிரச்சினைக்கு இந்தியா சார்பில் கருத்து சொல்லப்பட்டிருக்குன்னு யாராவது கேட்டால்.... // சமீபத்திய உதாரணம், ஈரானின் வெளிப்படையான அறிக்கை: 'ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான பதற்றத்தைக் குறைக்க இந்தியா எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்'. சர்வதேச பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவின் தலையீடு, நடுநிலையான நியாயமான தீர்வு வேண்டும் என்று உலகநாடுகள் எதிர்பார்ப்பதற்கு, இந்த ஒரு பானைச்சோறு போதுமென்று நினைக்கிறேன். இதை எல்லாம், கவைக்குதவாத சாரமற்ற அடுக்குமொழி வசனங்கள் மட்டுமே எழுதி, தனி நபர் பிரச்சனைகளை மட்டுமே முன்னிறுத்தி மக்களை ஆண்டாண்டுகாலமாக மாயையில் வைத்திருக்கும் திராவிடக் கட்சிப் பத்திரிக்கைகளை மட்டும் படித்துவந்தால் தெரியாமலிருக்க வாய்ப்பு அதிகம். கூடவே, தினமலர் போன்ற பத்திரிகைகளையும் தொடர்ந்து படித்துவந்தால் நல்ல விஷயங்களும் நடந்திருப்பது புரியும். ஹ்ம்ம்.. எங்க படிக்கறாய்ங்க? ( 'எங்களை எங்க படிக்கவிட்டாங்க? ஆண்டாண்டுகாலமாக அடிமையாக வைத்திருந்தார்கள்'ன்னு மறுபடி மறுபடி பொய்யான வாதத்துக்கே போனால், அதுவும், எல்லா விஷயங்களும் இன்று கையகல வெண்திரையில் தட்டினால் உலாவரும் காலகட்டத்திலும் இப்படியே உளறிக்கொண்டிருந்தால், எப்படி உண்மை விளங்கும்?)...
Rate this:
Share this comment
Cancel
Dhanush - Tirunelveli,இந்தியா
16-ஜன-202013:02:24 IST Report Abuse
Dhanush இந்தியாவின் தலை சிறந்த வெளியுறவு துறை அமைச்சர் என்பதை நிரூபித்துள்ளார்
Rate this:
Share this comment
Cancel
rajan - erode,இந்தியா
16-ஜன-202009:39:44 IST Report Abuse
rajan அமெரிக்கா எம்பிக்களை பார்ப்பதை தவிர்த்தவர் சொல்கிறார் ஒதுங்கி சென்றவர் சொல்கிறார்
Rate this:
Share this comment
மணிவாசகம் - உறையூர்,இந்தியா
18-ஜன-202021:34:32 IST Report Abuse
மணிவாசகம்அமெரிக்கா மட்டுமல்ல, மலேசியாவுக்கும் இதே கதிதான். யாரை எப்படி என்று எவ்வாறு சந்திக்க வேண்டும்பதும், யாரை தற்போது சந்திக்கவேண்டாம் என்பதும் அவருக்குத் தெரியுமய்யா. (இவ்வளவு தூரம் அடேங்கப்பா என்று வியக்கவைக்கும் 'அரசியல் ஞானத்தோடு'() பேசுகிறீர்களே, பாகிஸ்தான் அதிபர் திரு. இம்ரான்கானை சந்திக்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளதும், புதுடில்லிக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டதும் தெரியுமா?) அந்தப் புரிதல் அவருக்கு இருப்பதை அவர் தன் நீண்ட நெடிய அரசாங்க சேவையில் நிரூபித்ததால்தான் அந்த கௌரவமான, மிகவும் சிக்கலான பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை மறந்துவிட்டுப்பேசவேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X