போலியோ ெசாட்டு மருந்து முகாம்: ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலியோ ெசாட்டு மருந்து முகாம்: ஆலோசனைக் கூட்டம்

Added : ஜன 15, 2020

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது.

தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. சங்கராபுரம் பகுதியில் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் ரோட்டரி தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன், ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்ததனன், முன்னாள் தலைவர் முர்த்தி முன்னிலை வகித்தனர்.

புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார் பேசுகையில், 'சங்கராபுரம் வட்டத்தில் 19ம் தேதி நடக்கும் முகாமில் 5 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். 109 முகாம்களில் 500 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.பஸ் நிலையம், சினிமா தியேட்டர், ராவுத்த நல்லுார் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. பொது மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

கூட்டத்தில் மணிவண்ணன், வாசவி கிளப் தலைவர் சீனிவாசன், இன்னர்வீல் கிளப் தலைவி சுபாஷினி தாமரைச்செல்வன், குசேலன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X