ராஜிவ் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (6)
Advertisement
ராஜிவ், கொலை, வழக்கு, சுப்ரீம்_கோர்ட், அதிருப்தி, குற்றப்புலனாய்வு

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குண்டு தயாரிப்பு பற்றிய விசாரணை விபரங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு துறை தாக்கல் செய்த அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட குண்டு தயாரிப்பு குறித்து குற்றப் புலனாய்வு துறையின் ஒழுங்கு கண்காணிப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. 'இவ்விசாரணையை முடிக்கும் வரை தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் குண்டு தயாரிப்பு குறித்த விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்து குற்றப் புலனாய்வு துறை போலீசார் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இது உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்: இதற்கு முன் குற்றப் புலனாய்வு துறை தாக்கல் செய்த அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாங்காக் சென்றது உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் ஏற்கெனவே தெரிவித்த அறிக்கையில் உள்ளபடியே தற்போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இது தொடர்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி பதில் அளிக்கவும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் புதிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202015:38:14 IST Report Abuse
Lion Drsekar எது எப்படியோ வாட்ஸாப்பில் சென்று ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும், அந்த அளவுக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைவிட , காவல்துறை அதிகாரிகளின் பேட்டிகளே சாட்சியாக இருக்கிறதே, எல்லாவற்றையும் விட பூந்தமல்லி ஊருக்குள் செல்லமுடியாமல் முக்கிய பிரமுகர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பல ஆண்டுகள் எந்த வாகனம் செல்ல முடியா அளவுக்கு பாதுகாப்பு .... முக்கிய பிரமுகர்களுக்குக்கூட இந்த அளவுக்கு கொடுத்திருப்பார்களா என்று தெரியாது, வாழ்க எல்லா அமைப்புகளும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜன-202010:37:07 IST Report Abuse
Sampath Kumar ஆக இவர்கள் விடுதலை செய்யப்பட கூடாது அதுக்கு ஒரு வழக்கு வாய்தா அப்பீல் சீராயவு மனு புது விசாரணை ஆக நீதி மன்றம் , மற்றும் நீதி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் . இந்த நாட்டில் பணக்காரனுக்கு ஒரு நீதி பாமரனுக்கு ஒரு நீதி என்று ஆகி விட்டது உலகில் இல்லா அதிசயம் இது
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-ஜன-202008:21:32 IST Report Abuse
RajanRajan டீ ரொம்ப சூட இருக்கு இன்னும் நல்லா ஆத்தி கொடுங்க என்று அறிவுறுத்த பட்டுள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X