தமிழ்நாடு

பாதிப்பு! அடியோடு அழிக்கப்படும் காடுகளால் சுற்றுச்சூழல்...மீண்டும் காப்பு காடுகளை உருவாக்க கோரிக்கை

Added : ஜன 15, 2020
Advertisement
 பாதிப்பு!  அடியோடு அழிக்கப்படும் காடுகளால் சுற்றுச்சூழல்...மீண்டும் காப்பு காடுகளை உருவாக்க கோரிக்கை

தியாகதுருகம் : வியாபார நோக்கில் யூக்கலிப்டஸ்மரங்களை வளர்க்க,வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்புஏற்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கல்வராயன் மலை அமைந்துள்ளது. இதன் அடிவாரத்திலிருந்து தரை காடுகள் துவங்குகிறது. இது கச்சிராயபாளையம், சின்னசேலம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை ஆகிய பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் பரவி காணப்படுகிறது.கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இவை அனைத்தும் காப்பு காடுகளாக இயற்கை எழிலோடு சுற்றுச்சூழலை பாதுகாத்தது. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், இயற்கை காடுகள் 75 சதவீதம் அழிக்கப்பட்டது.இதில் வளர்ந்திருந்த காட்டு மரங்கள், செடிகள், மூலிகை தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டது.

இதனால், காடுகளில் வாழ்ந்த ஏராளமான வனவிலங்குகள் இறந்தன. மற்றவை தப்பிப் பிழைத்து, வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.இவ்வாறு அழிக்கப்பட்ட காடுகள் இருந்த இடத்தில் வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரங்கள் வனத்துறையினரால் வளர்க்கப்படுகிறது. இயற்கை காடுகள் அழிக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் குறைந்தது. இங்கு வளர்க்கப்படும் மரங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெட்டி பேப்பர் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கிறது.

ஆனால், மறைமுகமாக பல பாதிப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழைக் காலத்தில் போதிய அளவு மழை பெய்யாமலும், கோடைகாலத்தில் கடும் வெப்பமும் வாட்டி வதைக்கிறது. இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக விவசாயத்தை நம்பியுள்ள இப்பகுதி மக்கள் மழை இன்றி கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இயற்கை காடுகளாக இப்பகுதி இருந்தவரை மரங்கள், புதர்கள் சூழ்ந்து எளிதில் யாரும் செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாக தாவரங்கள் வளர்ந்து இருந்தது.

தற்போது யூகலிப்டஸ் மரங்கள் வளர்ப்புக்காக இயற்கைக்காடுகள் அழிக்கப்பட்டதால் வெட்டவெளி மைதானம் போல் காணப்படுகிறது. யூக்கலிப்டஸ் மரங்கள் கடும் வறட்சியை தாக்குப் பிடித்து வளரும் என்றாலும், பல மீட்டர் ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும்.எனவே, காப்புக் காடுகளை மீண்டும் உருவாக்கினால் மட்டுமே இப்பகுதியில் இயற்கைவளம் பாதுகாக்கப்படும். காடுகளை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகளே அதனை அழித்துசுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது இயற்கை ஆர்வலர்களை கவலை அடையச் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X