பொது செய்தி

தமிழ்நாடு

பாஸ்டேக்கிற்கு மாறாததால் டோல்கேட்டில் காத்திருந்து செல்லும் அரசு பஸ்கள்

Added : ஜன 15, 2020
Advertisement

கள்ளக்குறிச்சி : பாஸ்டேக்கிற்கு மாறாததால் அரசு பஸ்கள் டோல்கேட்டில் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது.

நாடு முழுவதும் உள்ள டோல்கேட்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்று, விரைவாக செல்லும் வகையில் 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதையொட்டி 80 சதவீத தனியார் வாகனங்கள் பாஸ்டேக் முறைக்கு மாறியது. கட்டணம் செலுத்தி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் கட்டாயமாக பாஸ்டேக்கிற்கு மாற வேண்டும்.இல்லையெனில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதற்கான காலக்கெடுவும் நேற்றுடன் முடிந்தது. பாஸ்டேக் பயன்படுத்திச் செல்லும் வாகனங்கள் 4 லேன்களில் அனுமதிக்கப்பட்டதால் டோல்கேட்டில் நிற்காமல் சென்றன. கட்டணம் செலுத்திச் செல்லும் வாகனங்களுக்கு ஒரு லேன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் கட்டணம் செலுத்தி செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

பெரும்பாலான அரசு பஸ்கள் இன்னும் பாஸ்டேக் முறைக்கு மாறாததால், மற்ற வாகனங்களுடன் கட்டணம் செலுத்திச் செல்லும் வரிசையில் காத்திருந்தன. ஏற்கனவே இந்த பஸ்கள் மாதாந்திர பாஸ் அடிப்படையில் இயங்கி வந்தது.தற்போதும் அதே முறையை கடைபிடிப்பதால், நெடுந்துாரம் பயணம் மேற்கொள்ளும் பஸ்கள் டோல்கேட்களில் நீண்ட நேரம் காத்திருந்து காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X