பொது செய்தி

இந்தியா

ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கான 'ஷெங்கென் விசா' கட்டணம், உயர்வு

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி; ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கான 'ஷெங்கென் விசா' கட்டணம், உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, பிப்.,2 முதல் அமலுக்கு வருகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட, 26 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல, 'ஷெங்கென் விசா' அவசியம். இதற்கான கட்டணம், 4 ஆயிரத்து,740 ரூபாயில் இருந்து, 6 ஆயிரத்து, 320 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 'ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விசா கட்டணம் இல்லை' என, ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகளவில், மிக அதிகமாக, ஷெங்கென் விசா பெறும் நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்விசா கோரி, 2018ல், 1.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில், டில்லியில் உள்ள சுவிட்சர்லாந்து துாதரகம், மிக அதிகமாக, 1.61 லட்சம் விண்ணப்பங்களை பெற்றுள்ளது. அடுத்த இடங்களில், டில்லி, மும்பையில் உள்ள பிரான்ஸ் துாதரகங்கள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X