பொது செய்தி

இந்தியா

லோக்பால் உறுப்பினர் திலீப் ராஜினாமா ஏற்பு

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி: லோக்பால் உறுப்பினராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி திலீப் பாபாசாகிப் போஸ்லேவின் ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

அரசியல் தலைவர்கள் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க மத்தியில் லோக்பால் அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் அமைக்கப்பட்டன. இதையடுத்து 2019 மார்ச் மாதம் லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் பதவியேற்றுக்கொண்டார்.

அந்த அமைப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் என எட்டு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த அமைப்பின் உறுப்பினராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி திலீப் பாபாசாகிப் போஸ்லே 6ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

திலீப் போஸ்லேவின் ராஜினாமாவை மத்திய பணியாளர் துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. ஜனவரி 12ல் திலீப் போஸ்லே அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திலீப் போஸ்லே 'டுவிட்டரி'ல் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X