பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு பயணியர்

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Pongal, Foreigners, பொங்கல், வெளிநாட்டு, பயணிகள், மாட்டுவண்டி

தஞ்சாவூர் : தஞ்சையில் சுற்றுலா துறை சார்பில் நடந்த பொங்கல் திருவிழாவில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணியர், மாட்டு வண்டியில் கிராமத்தை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தில், சுற்றுலா துறை சார்பில், நேற்று காலை பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், இத்தாலி, மெக்ஸிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த, 48 சுற்றுலா பயணியர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு, தமிழர் பாரம்பரிய முறைப்படி, கிராம மக்கள் மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். பின், அவர்கள் கிராம மக்களுடன் இணைந்து, பொங்கல் வைத்து கொண்டாடினர். வழுக்கு மரம் ஏறுதல், கபடி, உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை கண்டு ரசித்தனர்.

தொடர்ந்து, 10 மாட்டு வண்டிகளில் வெளிநாட்டுப் பயணியர் ஏறி, கிராமம் முழுவதையும் வலம் வந்தனர். கிராம மக்கள் திரண்டு, அவர்களுடன், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.'மாட்டு வண்டியில் பயணம் செய்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது' என வெளிநாட்டு சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விழாவில், வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, ராஜய்சபா எம்.பி., வைத்திலிங்கம், கலெக்டர் கோவிந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஜன-202018:29:51 IST Report Abuse
Bhaskaran உலகுக்கே விருந்தோம்பலை கற்றுக்கொடுத்த இனம் தமிழக உழவர் இனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X