பொது செய்தி

இந்தியா

தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் ரூ.86 கோடி

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம், நாடு முழுவதும், ஒரு நாளில், ௮௬ கோடி ரூபாயாக உயர்ந்து, சாதனை படைத்துள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்கள் சென்று வர, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில், பணம் செலுத்த வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால், மின்னணு முறையிலான, 'பாஸ்டேக்' திட்டத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்தது. இந்த அட்டைகள் வைத்திருக்கும் வாகனங்கள், சுங்கச்சாவடிகளை விரைவாக கடக்க முடிகிறது.

இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற விழா ஒன்றில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் சுக்பீர்சிங் சந்து கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகட்டண வசூல், பாஸ்டேக் முறையில் விரைவாக நடக்கிறது. இந்த கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் சுங்க சாவடியில், ௯௧ சதவீத கட்டண வசூல், பாஸ்டேக் கார்டு முறையில் நடக்கிறது.

கடந்த வருடம்,நவ., 2019ல், தேசிய அளவில் ஒரு நாள் சுங்க கட்டண வசூல், 23 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, ஜன., ௧௨ல், தேசிய அளவில், ௮௬ கோடியே ௨௦ லட்ச ரூபாய் வசூலாகியிருக்கிறது. இது ஒரு சாதனையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X