பொது செய்தி

இந்தியா

1984 சீக்கிய கலவரம் மத்திய அரசு விளக்கம்

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி: டில்லியில், 1984ல் நடந்த சீக்கிய கலவரம் தொடர்பான, 186 வழக்குகள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாகவும், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா, 1984, அக்டோபரில், அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, டில்லியில் கலவரம் வெடித்தது. சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில், டில்லியில் மட்டும் 2,733 பேர் பலியாகினர்.

இந்த கலவரம் தொடர்பாக, 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவை விசாரிக்கப்பட்டு, முடித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த வழக்குகள், நியாயமான முறையில் விசாரிக்கப் படவில்லை என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என்.திங்ரா தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை, 2018ல் அமைத்தது.

இந்த குழு நடத்திய விசாரணையில், 1984 கலவரத்தில், பல போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறப்பு விசாரணை குழுவின் பரிந்துரை ஏற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X